பிக்பாஸில் கலந்துகொள்ள போகிறாரா இந்த காமெடி பிரபலம் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 100 நாள் ஒரு வீட்டுக்குள்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற அந்த கான்சப்டே கவனம் ஈர்த்தது. மேலும் அந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதாக கூறப்பட்டதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

Madhumitha expect to entry in Kamal Haasan's Bigg Boss 3

இந்நிலையில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டு, அதற்கான புரோமோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சிகளில் சில பிரபலங்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டும் அவர்கள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி, டிமான்டிக்காலனி ஆகிய படங்களில் நடித்த நடிகை மதுமிதா கலந்துகொள்விருப்பதாக தகவல்கள் வெளியாகின. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, பிக்பாஸ் டீமில் இருந்து அவரை அனுகியதாகவும் அதன் காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.