பிகில் வெறித்தனத்துக்கு பின் ‘தளபதி 64’-ஐ Target செய்யும் கானா ராக்ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் பாடிய கானா சிங்கர் பூவையாருக்கு, அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 64’-ல் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Bigil Verithanam Gana Poovaiyar to act in Vijay's Thalapathy 64

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடி தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் கானா ராக்ஸ்டார் பூவையார். இவர் தர்போது திரைப்படங்களில் பாடுவதிலும், நடிப்பதிலும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரத்யேக பேட்டியளித்த கானா சிங்கர் பூவையார் பிகில் அனுபவம் குறித்தும், தனது அடுத்த திரைப்பட வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார். பிகில் திரைப்படத்தில் விஜய் தனது சொந்த குரலில் பாடிய ‘வெறித்தனம்’ பாடலில் சூப்பர் சிங்கர் புகழ் கானா சிங்கர் பூவையார் பாடி, நடித்துள்ளார்.

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் கலந்துக் கொண்டிருப்பதாகவும், ஓகே ஆனால் அந்த படத்திலும் நடிக்க வாய்ப்பிருப்பதகாவும் பூவையார் கூறினார். மேலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவித்தார்.

பிகில் வெறித்தனத்துக்கு பின் ‘தளபதி 64’-ஐ TARGET செய்யும் கானா ராக்ஸ்டார் வீடியோ