தன் குழந்தைக்கு பெயர் சூட்டியதை மகிழ்ச்சியுடன் அறிவித்த பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகையான சுஜா வரூணி பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக கவனம் பெற்றார். அவர் நடிகரும், நடிகர் திலகம் சிவாஜியின் பேரனுமான சிவகுமாரை திருமணம் செய்தார்.

Bigg Boss fame Suja Varunee named his son as Adhvaaith

இத்தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆண் குழந்த பிறந்தது. இருவரும் அந்த குழந்தையை சிம்பா என அழைக்கவிருப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் நடிகை சுஜா வரூணி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கணவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்

அந்த பதிவில், ''எல்லோருக்கும் வணக்கம். எங்கள் குடும்பத்துக்கு இன்று மிகச்சிறப்பான நாள். பெருமையுடன் மகிழ்ச்சியுடனும் இதனை பகிர்ந்து கொள்கிறேன்.  எங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழா.  எங்கள் குழந்தைக்கு எஸ்.கே. அத்வைத் என பெயர் சூட்டியுள்ளோம்'' என்று அறிவித்துள்ளார்.