'உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ...' - சகோதரன் அருண் விஜய் குறித்து வனிதா உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 20, 2019 11:03 AM
கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாஃபியா' படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து அருண் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து அருண் விஜய் 'சினம்' படத்தில் நடித்து வருகிறார். ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸாக நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.
நடிகர் அருண் விஜய்யின் பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவரது சகோதரியும் நடிகையுமான வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அதில், ''ஒரே வாழ்க்கை, ஒரே குடும்பம், ஒரே ரத்தம், நீயும் நானும் தனிப்பட்ட பயணித்தில் இருக்கலாம். ஆனால் இருவரும் இணைந்து தொடங்கினோம். நாம் கண்டிப்பாக நம் குடும்பத்தை பெருமை படுத்துவோம். ஒரே மாதிரி இருப்பதுவே எங்களை வித்தியாசப்படுத்திவிட்டது. பிறந்தநாள் வாழ்த்துகள். உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ ஐ லவ் யூ'' என்று குறிப்பிட்டுள்ளார்.
@arunvijayno1 indifferences are something that can be sorted out. One life one family one blood .you and I maybe in our own journeys but we started together. we must make our family proud.We are so similar that made us different .#HBDArunVijay whether you like it or not I love u https://t.co/A1MzByUzEI
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 19, 2019