விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புது கேம் ஷோவில் கலந்து கொள்ளும் பிக்பாஸ் 3 ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் சந்திரலேகா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார்.

Bigg Boss 3 Vanitha Participate in New Game show in Vijay TV

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது நடவடிக்கைகளால் பிரபலமானார். தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் வனிதா கலந்துகொண்டுள்ளார். அதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனை பகிர்ந்த வனிதா, ஜாலியான குக்கரி கேம் ஷோ விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்.