கொரோனா நேரத்திலும் 'ஷாப்பிங்' செய்வது ஏன்?... பிக் பாஸ் வனிதாவின் புதிய திட்டம் இதுதானாம்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா அச்சறுத்தலில் இருக்கிறது. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி பட்ட சூழ்நிலையை இந்திய மக்கள் இதுவரை சந்தித்ததில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. வேலை செய்பவர்களும் கூட வீட்டில் இருந்து தான் வேலை செய்து வருகின்றனர். பலரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை வனிதா. பின்பு அதே தொலைக்காட்சி நடத்திய சமையல் நிகழ்ச்சியில் வின்னரும் ஆனார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு யூடுயூப் சேனல் ஆரம்பிக்க போவதாக கூறியிருந்தார். அதன்படி அந்த வேளைகளில் தற்போது தீவிரமாக இறங்கி வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு ஷாப்பிங் செய்கிறார் வனிதா. கொரோனா நேரத்துல எதற்கு இந்த அவசர ஷாப்பிங் தெரியுமா. அவரது சேனலில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை தான் வாங்கி கொண்டுள்ளாராம் அவர்.