கொரோனா : வீட்டிலேயே ஷூட்டிங் நடத்தும் பிக் பாஸ் வனிதா... ஆமா அந்த 'கோமாளி' என்ன செய்கிறார்..?
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா அச்சறுத்தலில் இருக்கிறது. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி பட்ட சூழ்நிலையை இந்திய மக்கள் இதுவரை சந்தித்ததில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. வேலை செய்பவர்களும் கூட வீட்டில் இருந்து தான் வேலை செய்து வருகின்றனர். பலரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை வனிதா. பின்பு அதே தொலைக்காட்சி நடத்திய சமையல் நிகழ்ச்சியில் வின்னரும் ஆனார். அவர் சமீபத்தில் ஒரு யூடுயூப் சேனல் ஆரம்பிக்க போவதாக கூறியிருந்தார். அதன்படி அந்த வேளைகளில் தற்போது தீவிரமாக இறங்கி வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், வனிதா ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தனது புதிய யூடியூப் சேனலின் முதல் நிகழ்ச்சியின், முதல் எபிசோட் வேளைகளில் களமிறங்கி உள்ளதாக கூறியுள்ளார். இது ஒரு பக்கம் என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எல்லோரது மனதையும் கவர்ந்த சிவாங்கி அந்த புகைப்படத்தின் ஓரத்தில் இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இது எந்த மாதிரி நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது என்று யோசித்து வருகின்றனர்.