குக் வித் கோமாளி நிகழ்ச்சி... மகுடம் சூடிய அந்த நட்சத்திரம்..! இறுதிச்சுற்றின் வின்னர் யார்.?
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி நடத்தி வரும் குக் வித் கோமாளியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றவர் பற்றிய தகவல் வெளியானது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. பிரபல நட்சத்திரங்களை வைத்து நடத்தப்படும் இந்த சமையல் நிகழ்ச்சி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. செஃப் தாமு மட்டும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றனர். நடிகை ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா, வனிதா, விஜயகுமார், தாடி பாலாஜி, பாலா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியின் க்ராண்ட் ஃபினாலே இன்று ஒளிபரப்பானது. இதில் நடிகை வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சுற்றில் வனிதா விஜய்குமாருடன் சேர்ந்து ரம்யா பாண்டியன், ரேகா, உமா ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் அடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.