பிரபல ஹீரோயினுக்கு வீடியோ கால் செய்த பிக்பாஸ் கவின் - வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கவின் - 'பிகில்' அம்ரிதாவுடன் இணைந்து 'லிஃப்ட்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாகவும் தற்போது இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை  அம்ரிதாவிற்கு இன்று( 14/05/2020 ) பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை அம்ரிதா கடந்த வருடம் இதே நாளில் தளபதி விஜய்யுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்ரிதா ஸ்பாட்ல செம்ம ஃபோகஸ்ஸா இருந்ததால, ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக்கல நாங்க. இப்போ தான் வேலை இல்லையே அதான் கஷ்டப்பட்டு வீடியோ கால்ல எடுத்துட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor