"One and Only Superstar சிம்பு" - பிக் பாஸ் தர்ஷனின் காதலி! வைரல் போட்டோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 17, 2019 04:34 PM
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி சிம்புவை சந்தித்து பேசி செல்ஃபி எடுத்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷன் தன்னிடம் ப்ரொபோஸ் செய்ததாக மீரா மிதுன் தெரிவித்தார். அது சுத்தப் பொய் என்பது சக போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் தெரியும்.
தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். இந்நிலையில் சனம் ஷெட்டி சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எடுத்த செல்ஃபியை சனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்
சிம்பு பற்றி சனம் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
நான் யாரை சந்தித்தேன் என்று பாருங்கள். நம் தலைமுறையினருக்கு டிரெண்ட்செட்டிங்காக இருக்கும் படங்களை அளிக்கும் தி ஒன்ட் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார். அவரின் அறிவை பார்த்து வியக்கிறேன். சினிமா முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். உங்களை சந்தித்ததில் பெருமையாக உள்ளது டியர் சிம்பு என்று தெரிவித்துள்ளார்.
சனம் சிம்புவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை எஸ்.டி.ஆர். ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். சனம் அவ்வப்போது பிக் பாஸ் குறித்தும் போஸ்ட் போடுகிறார். பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதை பார்த்து சனம் ஷெட்டி பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.