Bigg Boss 3 Promo : முகேனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி! வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 15, 2019 04:11 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் (14.07.2019) இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா வெளியேறினார். அது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிறகு வெளியே வந்த வனிதா கமல்ஹாசனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி பார்வையாளர்களுடன் அவர் அமர்ந்திருந்தார். அப்போது மற்ற போட்டியாளர்களிடம் வனிதா பற்றி கேட்டறிந்தார்.
அதற்கு ஒவ்வொருவரும் வனிதா பற்றி தங்களுக்கு தோன்றியதை தெரிவித்தனர். குறிப்பாக ஷெரின், சாக்ஷி உள்ளிட்டோர் வனிதா பற்றி பெருமையாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் கண்கலங்கினார்.
பிக்பாஸ் வீட்டில் நிறைய காதல் உருவாகி அங்கேயே அழிந்தும் போகியுள்ளன. ஓவியா- ஆரவ் ஆரம்பித்து தற்போதைய சீசனின் கவின்- அபிராமி வரை.
கவினை வீட்டிற்கு வந்த புதியதில் காதலிப்பதாக கூறிய அபிராமி, தற்போது முகேனிடம் தனது காதலை கூறியுள்ளார்.
தற்சமயம் வந்துள்ள இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், முகேன் அபிராமியை அனைவரது முன்பும் புகழ்கிறார். இதனால் வெட்கப்படும் அபிராமி தனது பேச்சில் முகேனை மிகவும் வெகுவாக புகழ்ந்து கடைசியில் ஐ லவ் யூ என்றும் கூறிவிட்டார்.
BIGG BOSS 3 PROMO : முகேனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி! வீடியோ இதோ வீடியோ