Flashback: விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து மீரா வெளியேற்றப்பட்டரா? வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 16, 2019 10:26 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் ஏற்கனவே விஜய் டிவியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதுன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் அமைப்பு நடத்திய மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். ஆனால் அழகிப்போட்டி நடத்தப்போவதாக கூறி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவருக்கு வழங்கிய மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப்பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு. பிக்பாஸ் வீட்டில் இவர் நுழைந்தவுடன் சாக்ஷி மற்றும் அபிராமி ஆகியோர் நடந்துகொண்ட விதம் மீராவின் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது
ஆனால் நாள் செல்ல செல்ல அவரின் உண்மை முகம் வெளிபட தொடங்கியது. ஹவுஸ்மேட்ஸ்கள் சொல்வதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் பேசிக்கொண்டிருக்கும் போதே எழுந்து சென்றுவிடுகிறார்.
குறிப்பாக இயக்குநர் சேரனுடன் மல்லுக்கட்டி வருகிறார் மீரா மிதுன். நேரத்திற்கு ஏற்றது போல் பிரன்ஷிப்பையும் மாற்றி பச்சோந்தி போல் நடந்து வருகிறார்
தற்போது தர்ஷனுடன் காதல் என அவரை ஒரு வழியாக்கி வருகிறார். தர்ஷன் விருப்பமில்லை என்று கூறியும் கட்டாயப்படுத்துவதோடு தொடர்ந்து தனது காதல் குறித்து பேசி அவரை டார்ச்சர் செய்து வருகிறார்.
இந்நிலையில் மீரா மிதுனை விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மீரா, தன்னுடன் ஜோடியாக நடனம் ஆடிய நபரை முகத்தில் கை வைத்து தள்ளிவிடுகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நடுவர்களான நடிகை சங்கீதா உள்ளிட்டோர் விளக்கம் கேட்டபோது பிளேட்டை மாற்றிப்போட்டு பேசுகிறார். மீராவின் பேச்சைக்கேட்டு எரிச்சலான நடிகை சங்கீதா, இப்போது கம்ப்ளையன்ட் செய்ய ஆரம்பித்து விட்டாய், ஜஸ்ட் கெட்அவுட் ஃபிரம் திஸ் பிளேஸ் என்கிறார்.
இதனை சற்றும் எதிர்பாராத மீரா அந்த இடத்தை விட்டு நகர்கிறார். அப்போதெ நடுவர்கள் என்றும் பாராமல் ஆர்க்யூ செய்கிறார் மீரா. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
FLASHBACK: விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து மீரா வெளியேற்றப்பட்டரா? வீடியோ இதோ வீடியோ