Bigg Boss Promo : எல்லாரும் பின்னாடி தான் பேசுறாங்க... நானும் பின்னாடி தான் பேசுவேன் - சாக்ஷி வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 16, 2019 01:17 PM
பிக்பாஸில் இன்று சாக்ஷிக்கும் மோகன் வைத்யாவிற்கும் சண்டை முட்டியுள்ளது.

இன்றைய நாளுக்கான இரண்டாவது வீடியோவில் மோகன் வைத்ய சாக்ஷியிடன், என்னால் பாத்ரூமை கழுவ முடியவில்லை. எனக்கு அந்த தண்ணீரில் கால் வைத்தால் உடலுக்கு ஓற்றுக்கொள்ளவில்லை. எனவே என்னை வேற டீமிற்கு மாத்திடுமா என்று தயவாக கேட்கிறார் மோகன்.
இதையெல்லாம் சரி சரி என மோகனிடம் மண்டையை ஆட்டிவிட்டு அப்படியே ரேஷ்மாவிடம் வத்திவைக்கிறார் சாக்ஷி. உடனே ரேஷமா ...பாத்ரூம் கழுவது கம்மி வேலை தானே என்று கூறுகிறார்.
இந்த கன்வெர்ஷேஷன் பாத்ரூமிலும் நடக்க, உள்ளே இருந்து வெளியே வந்த மோகன் வைத்யா சாக்ஷியிடம் சண்டையிடுகிறார். அங்க சரி சரின்னு சொல்லிட்டு இங்க வந்து எதுக்கு பேசிட்டு இருக்குற.. பேசுறதா இருந்த நேருக்கு நேர் பேசு என்கிறார். உடனே சாக்ஷி இங்கு யாரும் நேரடியா பேசுவதில்லை எல்லோரும் பின்னாடி தான் பேசுகிறார்கள் என்று கூறி தானும் பின்னாடி தான் பேசுவேன் என்பதை வெளிப்படுத்துகிறார்.
BIGG BOSS PROMO : எல்லாரும் பின்னாடி தான் பேசுறாங்க... நானும் பின்னாடி தான் பேசுவேன் - சாக்ஷி வீடியோ இதோ வீடியோ