இத்தனை நாள் வேற்று கிரகத்திலா இருந்தீர்கள்? -கொந்தளித்த லாஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 16, 2019 10:11 AM
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஐம்பது நாட்களில் கிட்டத்தட்ட பெரும்பாலான நாட்களில் லாஸ்லியா அமைதியாகத்தான் இருந்தார். கமல்ஹாசன் கூட ஒருசில முறை, லாஸ்லியா அமைதியாக இருப்பது தவறு என்றும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

இந்த நிலையில் வனிதாவின் வரவுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிந்தாலும் லாஸ்லியா பெண்கள் அணிக்கு செல்லாமல் ஆண்கள் அணிக்கு சென்றது யாருக்கும் ஆச்சரியமில்லை. அதுமட்டுமின்றி அவர் ஆண்கள் அணிக்கு சப்போர்ட் செய்து பெண்களை குறிப்பாக மதுமிதாவை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டார்.
பெண்களை ஆண்கள் தவறாக யூஸ் செய்கிறார்கள் என்ற மதுமிதாவின் குற்றச்சாட்டால் ஆத்திரமான லாஸ்லியா, இதனை வனிதா வந்த பின்னர் சொல்வது ஏன்? இத்தனை நாள் என்ன வேற்று கிரகத்திலா இருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி மதுமிதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கவினும், ஒட்டுமொத்தமா பெண்களை ஆண்கள் யூஸ் செய்ததாக கூறுவது தவறு என்றும், தர்ஷன், சேரன் எந்த பெண்களை யூஸ் செய்தார்கள்? என்றும் கேள்வி எழுப்ப மதுமிதா தர்மசங்கடத்தில் உள்ளார். வனிதாவின் தூண்டுதலினால் மூக்குடைப்பட்டு இருக்கும் மதுமிதா வெளியேறும் நேரம் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் வனிதாவின் வரவுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிந்தாலும் லாஸ்லியா பெண்கள் அணிக்கு செல்லாமல் ஆண்கள் அணிக்கு சென்றது யாருக்கும் ஆச்சரியமில்லை. அதுமட்டுமின்றி அவர் ஆண்கள் அணிக்கு சப்போர்ட் செய்து பெண்களை குறிப்பாக மதுமிதாவை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டார்.
பெண்களை ஆண்கள் தவறாக யூஸ் செய்கிறார்கள் என்ற மதுமிதாவின் குற்றச்சாட்டால் ஆத்திரமான லாஸ்லியா, இதனை வனிதா வந்த பின்னர் சொல்வது ஏன்? இத்தனை நாள் என்ன வேற்று கிரகத்திலா இருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி மதுமிதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கவினும், ஒட்டுமொத்தமா பெண்களை ஆண்கள் யூஸ் செய்ததாக கூறுவது தவறு என்றும், தர்ஷன், சேரன் எந்த பெண்களை யூஸ் செய்தார்கள்? என்றும் கேள்வி எழுப்ப மதுமிதா தர்மசங்கடத்தில் உள்ளார்.
#Day54 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/sZlaFYjVKJ
— Vijay Television (@vijaytelevision) August 16, 2019
இத்தனை நாள் வேற்று கிரகத்திலா இருந்தீர்கள்? -கொந்தளித்த லாஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ