Bigg Boss Promo: பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேறினாரா மதுமிதா? - என்ன நடந்தது ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 17, 2019 05:03 PM
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்குநாள் பரபரப்பும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுமிதாவின், ஆண்கள் பெண்களை யூஸ் பண்றாங்க என்ற குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்தது.

மதுமிதாவுடன் கவின்,லோஸ்லியா, தர்ஷன் உள்ளிட்டோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மற்ற போட்டியாளர்களிடையேயும் வார்த்தை போர் கடுமையாகி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள், கவின், அபிராமி, முகேன், லாஸ்லியா மற்றும் மதுமிதா.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பான பிக்பாஸ் புரோமோவில் கமல்ஹாசனுடன் மதுமிதா மேடையில் தோன்றுகிறார். அப்போது கமல் தட்டில் வைத்து கொடுத்த வெற்றியை தட்டி விட்டு விட்டீர்கள். உங்களது தியாகம் அகிம்சையுடன் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் எவிக்சன் படலம் இருக்கும்.
இம்முறை சனிக்கிழமையே நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுமிதா தானாக வெளியே வந்தது போன்று தோன்றுகிறது. என்ன நடந்தது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.
BIGG BOSS PROMO: பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேறினாரா மதுமிதா? - என்ன நடந்தது ? வீடியோ