இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 17, 2019 03:50 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்குநாள் பரபரப்பும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுமிதாவின், ஆண்கள் பெண்களை யூஸ் பண்றாங்க என்ற குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்தது.

தற்போது போட்டியாளர்களிடையே வார்த்தை போர் கடுமையாகி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள், கவின், அபிராமி, முகேன், லாஸ்லியா மற்றும் மதுமிதா.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் அபிராமி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் முகேன் விவகாரத்தில் அவரது நடவடிக்கைகள் மக்கள் மதிப்பில் அவருக்கு எதிரான மனப்பான்மையை கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பே கமல் பிக்பாஸ் வீட்டில் உள்ள ரகசிய அறையை ரசிகர்களுக்கு காண்பித்தார். ஒருவேளை இந்த வாரம் அபிராமி அந்த வீட்டிற்கு அனுப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்? - விவரம் இதோ வீடியோ