Bigg Boss Promo 2: சாவடிச்சுடுவேன் - கஸ்தூரியிடம் காண்டான கவின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 16, 2019 01:31 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் வரவேற்பை பெற்று வருகிறது. அதன் முக்கிய காரணம் கஸ்தூரி மற்றும் வனிதாவின் வருகை.
கஸ்தூரியின் வீட்டுக்குள் நுழைந்ததும் மற்ற போட்டியாளர்களை மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்ல விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. போதாதற்கு வனிதாவும் அபிராமி உள்ளிட்டோரை தூண்டிவிடத் தொடங்கினார்.
ஆரம்பமே முதலே கவினுக்கு கஸ்தூரியின் வருகை பிடிக்கவில்லையென்பது அவரது நடவடிக்கைகளில் தெரிந்தது. மேலும், முகின் விவகாரத்தில் கஸ்தூரியை கருப்பு காக்கா என கலாய்க்க தொடங்கினார். தற்போது ஒளிபரப்பான இரண்டாவது புரொமோவில், கஸ்தூரி சாண்டியிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது குறுக்கே வரும் கவின் தடுக்கிறார்.
அப்போது கஸ்தூரி அப்படி பார்த்தா நீங்க நாளு பேரு கூட பேசிருக்கக் கூடாது என்கிறார். உடனே காண்டான கவின், 4 பேரு விருப்பத்தோட பேசுனேங்க. இதுக்கு மேல இத பத்தி பேசுனீங்க சாவடிச்சுடுவேன் என்கிறார்.
BIGG BOSS PROMO 2: சாவடிச்சுடுவேன் - கஸ்தூரியிடம் காண்டான கவின் வீடியோ