''ஒரு ஆம்பளையா ஆம்பள கூட மோது, ஏன்...?'' - கவின் குறித்து ஆக்ரோஷமாக பதிலளித்த சாக்ஷி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 17, 2019 03:05 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கஸ்தூரியும், சிறப்பு விருந்தினராக வனிதாவும் உள்ளே நுழைந்தனர். அதுவரை ஒன்றிரண்டு பிரச்சனைகள் மட்டுமே இருந்த பிக்பாஸ் வீட்டில் அவர்களது வருகைக்கு பிறகு பிரச்சனைகள் பூதாகரமானது.

குறிப்பாக ஆண்கள், பெண்களை யூஸ் பண்ணிக்குறாங்க என்ற மதுமிதாவின் குற்றச்சாட்டும் அதற்கு கவின், சாண்டி உள்ளிட்டோரின் எதிர்வினைகள் தான் பிக்பாஸ் வீட்டில் ஹாட் டாபிக்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் சாக்ஷி. அவர் பிக்பாஸ் வீட்டில் நடந்த கவின் விவகாரம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது கவின் குறித்து பேசிய அவர், கவின் பெண்களை வைத்தே கேம் ஆடுகிறார். அவர் ஆண்களுடன் ஏன் கேம் விளையாடவே இல்லை. ஏன்னா, கேர்ள்ஸ் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உங்களுக்கு சமமான ஆண்கள் கூட விளையாடுங்க. ஜெய்ச்சு நிரூபிங்க என்றார்.
''ஒரு ஆம்பளையா ஆம்பள கூட மோது, ஏன்...?'' - கவின் குறித்து ஆக்ரோஷமாக பதிலளித்த சாக்ஷி வீடியோ