ரிப்பீட்டே...! - நாமினேஷனில் இம்முறை Extra 2 பேரு! மக்கள் ஆதரவு யாருக்கு?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 22, 2019 10:52 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.
அவர்களை தொடர்ந்து இந்த வாரம், 29ம் நாளில் நாமினேஷன் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் நாமினேட் ஆன சரவணன், சேரன், அபிராமி, மீரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன், சென்ற வாரம் முக்கோண நட்பா? காதலா சர்ச்சையில் சிக்கிய கவின் மற்றும் சாக்ஷி ஆகியோரும் நாமினேட் ஆகியுள்ளனர்.
ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்து, அவரது உணர்வுகளுடன் விளையாடியதற்காக கவினை போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். அதேபோல், மீட்டிங் ஏற்பாடு செய்த விவகாரத்தில் மீரா மீது பழி சுமத்தியதற்காகவும், கவின் செய்த விஷயங்களால் மன உளைச்சலில் இருக்கும் சாக்ஷி வெளியேறினால் நன்றாக இருக்கும் என கருதுவதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
நாமினேட் செய்யப்பட்டுள்ள சரவணன், சேரன், அபிராமி, மீரா, கவின், சாக்ஷி ஆகியோரில் யார் இந்த வீட்டில் நீடிப்பார்கள், யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பதையும், இந்த வாரம் அவர்கள் நடந்துக் கொள்ளும் விதம் மூலம் மக்களிடம் எத்தனை வாக்குகளை பெறுகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.