'ஓ! மனமே ஓ! மனமே...': Kavin எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சியில் Bigg Boss வீடு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 19, 2019 03:18 PM
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3யில் தற்போது கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோருக்கு இடையே நிகழும் முக்கோண காதல் கதை தான் ஹாட் டாபிக்.

கவின் தனது சாக்லேட்டை லாஸ்லியாவிடம் கொடுக்க, அது சாக்ஷிக்கு தெரியவர அங்கே தொடங்கியது பிரச்சனை. வீட்டில் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை என சாக்ஷி மற்றும் மீராவை பிக்பாஸ் ஜெயிலில் அடைத்தார்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில், கவின் ஜெயிலில் இருக்கும் சாக்ஷியிடம் ரியலி மிஸ்யூ என்கிறார். அதில், எல்லாத்தையும் ஜாலிக்கா பண்ணனு சொன்னா என்ன பண்ணுவாங்க என பதிலுக்கு கேட்கிறார். அதனை கேட்ட கவின் அழுகிறார்.
பின்னர் வெளியான இரண்டாவது புரோமோவில் லாஸ்லியா கவினிடம் நீ பண்ணது பெரிய தப்பு கவின். ஒருத்தவங்களோட ஃபீலிங்கோட விளையாடுறது மிகப் பெரிய தப்பு என்கிறார். மச்சான் I am Done என கவின் சொல்ல, லாஸ்லியாவும் ஐயம் டன். என்கிறார்.
தற்போது வெளியான 3 வது புரோமோவில் பிக்பாஸ் வீட்டினர் அனைவரின் முன்னிலையிலும், என் தப்பு என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
'ஓ! மனமே ஓ! மனமே...': KAVIN எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சியில் BIGG BOSS வீடு வீடியோ