''உன்னை பிரிஞ்சு 22 நாள் ஆச்சு...'' - Bigg Boss தர்ஷன் குறித்து அவரது Girl Friend உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 18, 2019 05:38 PM
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சியில் மற்ற சண்டைகளை விட காதல் அத்தியாயங்களே படு சுவாரஸியமாக இருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் தர்ஷன். குறிப்பாக முக்கிய பிரச்சனை ஒன்றில் போட்டியாளர்கள் எல்லோரும் அமைதியாக இருக்க வனிதாவை கேள்வி எழுப்பியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இந்நிலையில் இவரது காதலி சனம் ஷெட்டி அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உன்னை பிரிந்து 22 நாள் ஆச்சு. என்று உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
Tags : Bigg Boss 3, Tharshan, Sanam Shetty