Bigg Boss Tamil 3: 'லூசு மாதிரி பேசின.. அடிச்சு சாவடிச்சுடுவேன்..!' - எகிறிய கவின், கதறிய சாக்ஷி!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 27, 2019 12:48 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராமி டாஸ்கில் தான் பிரச்சனை என்றால், டாஸ்க் முடிந்தும் பிரச்சனை பூதாகரமாகி வருகிறது.

கிராமிய டாஸ்க்கில் யார் பெஸ்ட் பெர்ஃபார்மர், யார் சுவாரஸ்யம் குறைவாக பெர்ஃபார்ம் செய்தார்கள் என்பதை போட்டியாளர்களே கூடி பேசி முடிவெடுக்கும்படி, பிக் பாஸ் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை கூறி வர, சுவாரஸ்யம் குறைவாக இருந்தது சாக்ஷி மற்றும் ஷெரின் என மீரா கூறினார்.
இதனை வழிமொழிவது போல், சாக்ஷி மற்றும் ஷெரின் மொழி பிரச்சனை காரணமாக கிராமிய வட்டார மொழி பேசுவதில் சிரமப்பட்டனர் என்றார் கவின். இதனால் கடுப்பான ஷெரின் கவினிடம் ஆர்க்யூ செய்தார். அவரைத் தொடர்ந்து பாத்ரூமில் அழுதுவிட்டு வந்த சாக்ஷி கோபத்தில் உச்சத்தில், நான் என்ன சுவாரசியமாக செய்யவில்லை சொல்லு என்று கேட்டார். கவினை பேசவிடாமல் தொடர்ந்து பேசினார் சாக்ஷி.
தான் சொல்ல வருவதை காதில் கூட வாங்காமல் பேசிக் கொண்டிருந்த சாக்ஷியிடம் கோபப்பட்ட கவின், ‘லூசு மாதிரி பேசின அடிச்சு சாவடிச்சிடுவேன்... என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காம கத்திக்கிட்டே இருக்க.. மொதல்ல என்ன பேசவிடுடி’ என கத்திவிட்டார். இதனால் சாக்ஷி மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
மொழி பிரச்சனைய வைத்து இருவரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், நீங்கள் வட்டார மொழியில் பேசாவிட்டாலும், முயற்சித்ததும், கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததும் தனக்கு மட்டும் அல்ல பிக் பாஸ் பார்க்கும் அனைவருக்கும் தெரியும் என கவின் கூறினார். எனினும், சாக்ஷி சமாதானம் ஆன பாடில்லை.
கமல்ஹாசன் வரும் இன்றைய எபிசோடில் இந்த கலாச்சார வித்தியாசங்கள் குறித்த பெரும் விவாதம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.