Bigg Boss 3 : பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தொடங்கிய கலாச்சார பிரச்சனை Promo Video இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 26, 2019 10:04 AM
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே மொழியை சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் எல்லோரும் தமிழ் மொழியை பேசுபவர்கள், இத்தனை நாள் காதல் சண்டை என தான் வீட்டில் நடந்தது.

Promo 1: முதன்முறையாக வீட்டில் மொழி, கலாச்சார பிரச்சனை எழும்புகிறது, சாக்ஷி இந்த விஷயங்களை பேச வேண்டாம் என்று கோபமாக பேச அதற்கு மீரா மிதுன் வேறொரு விஷயத்தை பேசுகிறார்.
இறுதியில் ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் அழுகிறார்கள், என்ன தான் பிரச்சனை என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
Promo 2 : கிராமத்து கெட்டப்பில் இன்று அனைவரும் தங்களது இயல்பான நிலைக்கு மாறியுள்ளனர். தற்போது கிராமத்து கெட்டப்பில் இருந்த போட்டியாளர்களில் யார் டாஸ்க்கை சரியாக செய்ததோ அவர்களை தேர்தெடுத்து பெஸ்ட் பிளேயர் பட்டத்தை கொடுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து ஒவ்வொருத்தராக தங்களது அபிப்பிராயத்தை சொல்ல, மீரா மிதுன் சரியாக விளையாடியதாக ரேஷ்மா கூறுகிறார். இதனை கேட்டவுடனே மதுமிதா கோபத்துடன், கொடுக்கப்பட்ட டாஸ்க்களை பெர்சனலாக எடுத்துக்கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்தது மீரா மிதுன் தான். அப்படியிருக்க நீங்கள் எப்படி அவர் பெஸ்ட் பிளேயர் என சொல்கிறீர்கள் என்று கேட்க பிரச்சனை வெடித்தது.
இதில் சேரனும் மதுமிதாவுக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் மது தான் சரியாக விளையாடினார் அவருக்கு தான் பெஸ்ட் பிளேயர் பட்டத்தை கொடுக்கவேண்டும் என கூறுகிறார். ஆக இந்த பெஸ்ட் பிளேயர் பட்டம் யாருக்கு போய் சேருகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்துக்கொள்வோம்.
BIGG BOSS 3 : பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தொடங்கிய கலாச்சார பிரச்சனை PROMO VIDEO இதோ! வீடியோ