''இந்த வருஷம் பிக்பாஸ் வீட்டுக்குள் போகலாம்னு இருந்தேன். ஆனா...''
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 26, 2019 12:06 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். காதல், மோதல் என இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸியம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வைல்ட் கார்டு மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக சில நடிகைகள் குறிப்பிட்டு செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.
அதில், ABSOLUTELY UNBEARABLE TO WATCH ! மூணு வருஷமா கேட்குறாங்களே இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் "ஐயோ சாமி ஆளை வுடு " என்ற feeling தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? #Toxic என்று குறிப்பிட்டுள்ளார்.
ABSOLUTELY UNBEARABLE TO WATCH ! மூணு வருஷமா கேட்குறாங்களே இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் "ஐயோ சாமி ஆளை வுடு " என்ற feeling தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? #Toxic
— Kasturi Shankar (@KasthuriShankar) July 26, 2019