Bigg Boss Tamil 3: ‘இதுக்கு பேரு தான் வெந்த புண்ணுல வேல பாய்ச்சிறதா..?’ நல்லா பண்றீங்க மா ரேஷ்மா..!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 27, 2019 11:50 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 33ம் நாள் எபிசோடில் கிராமிய டாஸ்க்கில் கவின் தனக்கு எதிராக கருத்து கூறியதால் மனம் உடைந்த சாக்ஷிக்கு ஆறுதல் கூறும் பெயரில் கவினை பற்றி போட்டுக் கொடுத்து சாக்ஷியை குழப்பிவிட்டார்.

இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கான கிராமிய டாஸ்க்கில் யார் சிறப்பாக கொடுத்த கதாபாத்திரத்தில் சுவாரஸ்யம் குறைவாக நடித்தனர் என்று பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து இரண்டு நபர்களின் பெயரை பரிந்துரைத்தனர்.
அப்போது, கவின் தனது கருத்தாக கொடுத்த கதாபாத்திரத்தை விட்டு ரூல்ஸ் பிரேக் பண்ணியதாக சேரன் பெயரை கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய கவின், மொழி பிரச்சனை காரணமாக சாக்ஷி மற்றும் ஷெரின் கிராமிய வட்டார மொழி பேசுவதில் சிரமப்பட்டனர். அது சற்று குறைவாக தெரிந்தது என்றார்.
சாக்ஷிக்கு எதிராக கவின் கூறிய இந்த கருத்து, சாக்ஷியை மிகுந்த மன கஷ்டத்தில் ஆழ்த்தியது. இந்த விவாதம் முடிந்த பிறகு, இந்த வீட்டில் கலாச்சார வேற்றுமைகளை திணிக்காதீர்கள் என்று கொந்தளித்தார். இந்நிலையில், இந்த பிரச்சனை ஒருவிதமாக அடங்கிய நிலையில், அதனை Trigger செய்யும் விதமாக, கேப்டன் ரேஷ்மா செய்த காரியம் பார்வையாளர்களை கடுப்பேற்றியது.
ஏற்கனவே மன கஷ்டத்தில் இருக்கும் சாக்ஷியிடம், ‘லொஸ்லியாவை சிறைக்கு அனுப்புவதில் கவினுக்கு விருப்பமில்லை, ஆனால் உன்னை குறை சொல்லுறான்.. எனக்கு அது தான் அதிர்ச்சியா இருக்கு..’ என்றார். உடனே சாக்ஷியும் ‘ஆமா அது உண்மை தான்..’ என்று சொல்ல, நீ புரிஞ்சிக்கோ கஷ்டத்துல யார் உன்கூட இருக்காங்கன்னு.. அவனால நீயே சும்மா சும்மா ஹர்ட் ஆயிட்டு இருக்காத..’ என அட்வைஸ் கூறுவது போல், சாக்ஷியை கவினுக்கு எதிராக கொம்பு சீவிட்டதாக மக்கள் கருதுகின்றனர்.