Bigg Boss Tamil 3: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் 4வது போட்டியாளர் இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 26, 2019 07:38 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கி வார வாரம் பல சுவாரஸ்யங்களுடன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஃபாத்திமா பாபு, அவரையடுத்து, வனிதா, அதன் பின்னர் மோகன் வைத்தியா ஆகியோர் வெளியேறினர்.
இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 எலிமினேஷனுக்கு சேரன், அபிராமி, மீரா, சரவணன், சாக்ஷி, கவின் ஆகிய 5 பேர் நாமினேட் ஆகியிருக்கும் சூழலில், மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இவர்களில் மீரா, கவின், சாக்ஷி ஆகியோர் மக்களின் வாக்குகள் குறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சாக்ஷி வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் நிறைய பின்னாடி புறம்பேசும் போட்டியாளர், நேரடியாக எந்த சண்டையிலும் ஈடுபடாமல் ஒரு சண்டை உருவாகவே சாக்ஷி காரணமாக இருந்திருப்பதாக மக்கள் கருதுவதால் அவர் இம்முறை வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.