Bigg Boss : ‘எத்தனை வந்தாலும் நாங்க தான் பெஸ்ட்’ - பிக் பாஸ் குறித்து சீசன் 1 பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 26, 2019 09:23 PM
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் ட்தேர்வு செய்யபட்டார். அதனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இதில் ரித்விகா வெற்றியாளரானார்.

தற்போது இரண்டு சீசன்களையும் தொடர்ச்சியாக 3 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கி 32 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் நடிப்பதாக மக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்ட நடிகை பிந்து மாதவி Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொனு பேசிய நடிகை பிந்து மாதவி, ‘பிக் பாஸ் சீசன் எத்தனை வந்தாலும், சீசன் 1ம் அதன் போட்டியாளர்களும் தான் பெஸ்ட். முதல் சீசனிலும், காதல், மோதல் என இருந்தாலும் எதார்த்தமாக இருந்தது, அடுத்தடுத்த சீசன்களில் அது குறைவாக தெரிகிறது. கேமரா இருப்பது தெரிந்து பலரும் Safe கேம் விளையாடுவதை மறுக்க முடியாது. அது எல்லா சீசனிலும் இருந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 3-ல் எனக்கு சாண்டி மாஸ்டரை மிகவும் பிடித்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் தேவையில்லாமல் பிரச்சனை கிளப்புவது மீரா, அவர் வீட்டை விட்டு வெளியேறலாம். அதேபோல், எலிமினேட் ஆன வனிதா மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் திரும்பினால் நன்றாக இருக்கும்.
வெளியுலகத்தை விட பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது 10 மடங்கு அதிக மன அழுத்தம் இருக்கும். அதனால் உடனே சிரிப்பு, சண்டை, அழுகை என அனைத்து எமோஷன் வெளிப்பட்டுவிடும். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது இங்க இருந்து போனா போதும் என்ற அளவிற்கு தோன்றும், ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டை நாங்கள் அதிகம் மிஸ் செய்கிறோம் என பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படமான ‘கழுகு’ படத்தின் இரண்டாம் பாகமான ‘கழுகு 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.1ம் தேதி ரிலீசாகிறது.
BIGG BOSS : ‘எத்தனை வந்தாலும் நாங்க தான் பெஸ்ட்’ - பிக் பாஸ் குறித்து சீசன் 1 பிரபலம் வீடியோ