Bigg Boss Tamil 3: ‘ஹே நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்..!’ - ஏரியாவில் Rowdy-ஆக form ஆன அபி, லொஸ்லியா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 27, 2019 12:54 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 33ம் நாள் எபிசோடில், கிராமிய டாஸ்க்கில் கொடுத்த கதாபாத்திரத்தை தாண்டி சேட்டை செய்து, ரூல்ஸை மீறிய குற்றத்திற்காக லொஸ்லியாவும், அபிராமியும் ஜெயிலுக்கு சென்றனர்.

லொஸ்லியா, கடந்த சில நாட்களாக நான் ஜெயிலுக்கு போணும் என் பெயரை சொல்லு என கவினை டார்ச்சர் செய்து வந்தார். அதேபோல, கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் இருந்து வெளியே சென்று ரூல்ஸை பிரேக் செய்ததால் லொஸ்லியா மற்றும் அபிராமி ஜெயிலுக்கு சென்றனர்.
லொஸ்லியாவும், அபிராமியும் கேம்பெய்ன் செய்து ஜெயிலுக்கு சென்றதில் துளியும் விருப்பம் இல்லாத கவின், தவறு செய்தவர்கள் இருக்க வேண்டும் என்று வம்படியாக ஜெயிலுக்கு செல்ல ஆசைப்பட்டவர்களை ஏன் உள்ளே அனுப்ப வேண்டும் என கோபப்பட்டார். மேலும், டாஸ்க்கின் போது இந்த விளையாட்டுக்கே வரல என எல்லாத்தையும் தூக்கி போட்ட சேரன் மீது யாரும் ஏன் குற்றம் சொல்லவில்லை என்றும் ஆதங்கப்பட்டார் கவின்.
இதனிடையே, ஜெயிலுக்கு சென்ற அபிராமியும், லொஸ்லியாவும் மிகவும் உற்சாகமாக ஜாலியாக உள்ளே சென்றனர். ஜெயிலுக்குள் இவர்களது அட்ராசிட்டி தாங்க முடியாமல் போட்டியாளர்கள் கடுப்பில் உள்ளனர். இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் நாங்களும் ரவுடி தான் என்பதை இருவரும் நம்பவைக்க முயற்சித்தாலும், பார்வையாளர்களுக்கு ‘இதென்ன சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு..’ என்று தோன்றுகிறது.