‘பில்லா’ ஏரியாவிற்குள் செல்லும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை- உலகளவில் வெறித்தனம் Waiting..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 26, 2019 06:34 PM
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் மலேசியாவில் வெளியாகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளன.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருவதுடன், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை மலேசியாவில் MSK ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. திரையரங்குகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தல அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் மலேசியா டானாக நடித்திருந்த நிலையில், தற்போது‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் அஜித், மீண்டும் மலேசிய ரசிகர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.