சூப்பர் ஸ்டாரின் தர்பாரில் நயன்தாராவுடன் இணைந்த 'இமைக்கா நொடிகள்' பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்'. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Baby Manasvi to act in Rajinikanth and Nayanthara's Darbar

தளபதிக்கு பிறகு இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார். சமீபத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்றுவருகிறது. இது பாடல் படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. இதனையடுத்து விமானத்தில் நயன்தாராவும் ரஜினிகாந்தும் அருகே அமர்ந்திருந்த ஃபோட்டோ சமீபத்தில் வைரலானது.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்த மானஸ்வி தர்பாரில் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் மானஸ்வி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.