வத்திக்குச்சி உள்ள வந்துருச்சுல..! வனிதாவை கலாய்த்த கஸ்தூரி ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 18, 2019 04:47 PM
பிக் பாஸ் 3 வீட்டிற்கு 17வது போட்டியாளராக கஸ்தூரி சென்ற வேகத்தில் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார் வனிதா. வனிதா வந்ததால் கஸ்தூரி கிட்டத்தட்ட டம்மியாகிவிட்டார்.

பாவம், கஸ்தூரியை தான் சக போட்டியாளர்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள். கற்பூர குணத்தை பற்றி கமல் ஹாஸன் பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. சாந்தமாக இருந்த தர்ஷனுக்கு எல்லாம் கற்பூரம் போன்று பத்திக் கொள்ளும் குணம் வந்துவிட்டது. கற்பூரத்தன்மை திடீர் என்று எங்கிருந்து வந்தது என்று கமல் ஹாஸன் கேட்க வத்திக்குச்சி உள்ளே வந்துவிட்டதுல்ல சார் என்று கஸ்தூரி தெரிவித்தார். கஸ்தூரியின் பதிலை கேட்டு வனிதாவுக்கு முகமே விளங்கவில்லை.
இன்று வெளியான 2வது ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் வனிதாவை வத்திக்குச்சி என்றார். இந்நிலையில் இந்த வீடியோவில் கமல் வார்த்தையையே பயன்படுத்தி வனிதாவை அசிங்கப்படுத்திவிட்டார் கஸ்தூரி. வனிதா அசிங்கப்பட்டதை பார்த்து பிக் பாஸ் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி தாங்காமல் கை தட்டி, விசில் அடித்தார்கள்.
வத்திக்குச்சி உள்ள வந்துருச்சுல..! வனிதாவை கலாய்த்த கஸ்தூரி ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ