"மக்கள் மிஸ் பண்ணாங்க அதனாலதான் மீண்டும் பிக்பாஸ் வந்தேன்" வனிதா ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். இந்நிலையில் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் வனிதாவை காட்டியுள்ளனர். அந்த வீடியோவில் கமலே வனிதாவை கலாய்த்துள்ளார்.

Bigg boss 3 Tamil Vanitha Madhumitha Kamal Haasan Vijay Tv Promo

நீங்க எதற்கு வந்தீங்க என்று கமல் ஹாஸன் வனிதாவை பார்த்து கேட்டார். அதுவும் வனிதாவை வத்திக்குச்சி என்றார். அதற்கு வனிதா, ஏதோ ஒரு விதத்தில் மக்கள் என்னை மிஸ் பண்ணினார்கள் என்று தெரிய வந்தது, ஆனால் நான் உங்களை மிஸ் பண்ணினேன் சார் என்று கூறினார். இதை கேட்ட சாண்டி ஆத்தா என்று கூறி தர்ஷன் மடியில் சாய்ந்துவிட்டார். என்ன சாண்டி மறுபடியும் கேர் ஆகிடுச்சா என்று கமல் கேட்ட, சார் தலை லைட்டா கேர் ஆகிடுச்சு என்றார்.

உங்களை மிஸ் பண்ணினேன் சார் என்று வனிதா கூறியதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் இது உலக மகா நடிப்புடா சாமி என்று தெரிவித்துள்ளனர். அதனால் வனிதாவை கிண்டல் செய்யும் வகையில் சாண்டி நடந்து கொண்டது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. ஹவுஸ்மேட்ஸில் சாண்டியாவது வனிதாவை கலாய்க்கிறாரே என்று சந்தோஷம் தான்.

"மக்கள் மிஸ் பண்ணாங்க அதனாலதான் மீண்டும் பிக்பாஸ் வந்தேன்" வனிதா ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ