சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த லாரன்ஸ் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நவராத்திரி கொலுவில் பிரபல நடிகரும், இயக்குநரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டார்.

Raghava Lawrence attended Navarathri celebrations at Rajni house

இந்தியா முழுவதும் கடந்த செப்.29ம் தேதி தொடங்கிய நவராத்திரி கொலு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 9 நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடும் இந்த பண்டிகை தமிழகத்திலும் களைக்கட்டியது. இந்த நவராத்திரி கொலு பண்டிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய சில நண்பர்கள் ரஜினி வீட்டில் வைக்கப்பட்ட கொலுவில் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், நடிகரும், இயக்குநரும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது லதா ரஜிகாந்தை போயஸ் தோட்டத்து இல்லத்தில் சந்தித்து, ஆசி பெற்றதுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

‘காஞ்சனா 3’ வெற்றியைத் தொடர்ந்து லாரன்ஸ் தற்போது பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘லக்ஷ்மி பாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக லாரன்ஸ் அறிமுகமாகிறார். இப்படம் தமிழில் லாரன்ஸ் இயக்கி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘காஞ்சனா’ படத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.