இவங்க தான் பிக்பாஸ் பார்க்க வச்சாங்க' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் அதிரடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்த சீசன் 3யின் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தில் சாண்டியும் மூன்றாம் இடத்தில் லாஸ்லியாவும் உள்ளனர்.

Gayathri Raguram tweets about Vanitha in Bigg Boss 3

இந்த சீசனில் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் கவினுக்கு பிறகு வனிதாவாகத்தான் இருக்கும். அவரது பேச்சு பிக்பாஸ் வீட்டின் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. சில நேரங்களில் நியாயமாக பேசினாலும் தவறாகவே அர்த்தம் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், வனிதாவிற்கு பாராட்டுக்கள். அவரது ரபெயரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சந்தேகமில்லாமல்  அவர் தான் பிக்பாஸ் 3யில் பொழுதுபோக்கை வழங்கினார்.