ஹீரோ - பிக்பாஸ் தர்ஷனுக்கு சிம்பு அளித்த கிஃப்ட் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடியே முகேன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்த சாண்டிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

STR gifted a book named Hero to Bigg Boss 3 fame Tharshan

இதனையடுத்து கடந்த சில வாரங்களாக பரபரப்பு பேசப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டு அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில் தர்ஷனும் சாண்டியும் நடிகர் சிம்புவை சந்தித்து ஆசிபெற்றனர். சாண்டியை பார்த்த சிம்பு அவரை தூக்கி சுற்றினார். பின்னர் இருவருக்கும் புத்தகங்கள் பரிசளித்தார். அதில் சிம்பு தர்ஷனுக்கு ஹீரோ என்ற புத்தகத்தை பரிசளித்தார். அந்த புத்தகத்தில், ஹீரோ உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறான் என்ற வாசகத்தை எழுதி சிம்பு கையெழுத்திட்டிருந்தார்.