நடிகர் சிம்பு சிறிய வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது முதலே அவர் எனக்கு நண்பர் என டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

ஹன்சிகாவின் மஹா படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்து வரும் நிலையில், அவர்கள் இணைந்து தோன்றும் ஒரு பாடலை சில நாட்கள் முன்பு படமாக்கியுள்ளனர். இதை பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் தான் கோரியோகிராப் செய்துள்ளார்.
அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சின்ன வயது முதலே நண்பர் என்றாலும் இப்போது தான் ஒன்றாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சிம்புவின் திறமை மற்றும் அறிவை பார்த்து வியந்துவிட்டேன். அவர் எனக்கு நண்பர் என சொல்வதை பெருமை என நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
My first song with my childhood buddy handsome #STR ⭐️⭐️⭐️⭐️⭐️ mass and lovely working with beautiful @ihansika pic.twitter.com/B7D4Gb81UQ
— Gayathri Raguramm (@gayathriraguram) May 27, 2019