''வெறும் 2 சீன் தான்'' - விரைவில் ரிலீஸாகும் இந்த படம் குறித்து ஆர்ஜே பாலாஜி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, 'எல்கேஜி' படத்தின் மூலம் ஹீரோவானார். அரசியலை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஸ், நாஞ்சில் சம்பத், ராம்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

RJ Balaji Clarifies his Screen Presence in Vijay Prabhu Deva's Devi 2

லியோன் ஜாம்ஸ் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா இணைந்து நடிக்கும் 'தேவி 2' படத்தில் நடிக்கிறார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர், இந்த படத்தில் வெறும் 2 சீன்கள் மட்டுமே வருவேன். மேலும் அந்த 2 சீன்களும் 5 அல்லது 6 நிமிடங்கள் வரை மட்டுமே இடம் பெறும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.