பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேவந்தவுடன் சாண்டிக்காக இதனை செய்த சித்தப்பு!!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 16, 2019 12:31 PM
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன், தனது குடும்பத்துடன் சாண்டியின் குடும்பத்தாரை அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். சக போட்டியாளர்களிடமும், மக்களிடமும் நல்ல பேரைப் பெற்றிருந்த சரவணன், கல்லூரி காலத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் சரவணன் தனது மகன் மற்றும் மனைவியுடன், பிக் பாஸ் போட்டியாளரான சாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்துள்ளார்
இது தொடர்பாக சாண்டி மாஸ்டரின் மனைவி சில்வியாவிடம் பேசும்பொழுது "பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது சாண்டி சரவணன் அவர்களிடம் தொலைபேசி எண் கொடுத்து என் குடும்பத்தை சென்று சந்திக்குமாறு கூறினார் அதனால்தான் உங்களை சந்திக்க வந்தேன் என்றார். அவர் மனைவியுடன் வந்து சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சில்வியா .அப்போது சாண்டியின் குழந்தை லாலாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் சரவணனின் மனைவி மற்றும் மகனும் உள்ளனர்.