Exclusive : "அபிராமியோட பழகுறது கஷ்டமா தான் இருக்கு" - முகெனின் மாமா பொண்ணு!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 06, 2019 04:46 PM
மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்டுள்ள மலேசியா சிங்கரான முகேனின் முறைப்பெண் துர்கா Behindwoods தளத்திற்கு அளித்த நேர்காணலில் பல்வேறு தகவலை பகிர்ந்துள்ளார்.

தமிழில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய வெவ்வேறான சுவாரசிய தகவல்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் இன்று மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்டுள்ள மலேசியா சிங்கரான முகேனின் முறைப்பெண் துர்கா Behindwoods தளத்திற்கு அளித்த நேர்காணலில் பல்வேறு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், "நானும் முகேனும் உறவினர்கள். சிறுவயது முதலே நன்கு பழகி வருகிறோம்.. இன்னும் சொல்லப்போனால் இருவரும் தங்களது கனவு லட்சியத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் பேசி வைத்துள்ளோம்.
இதற்கு முன்னதாக நானும் முகேனும் வெளியில் எங்கு சென்றாலும் அவருடைய ரசிகர்கள் ஓடோடி வந்து ஆசையாக புகைப்படம் எடுத்து செல்வார்கள். அதை நான் தூரத்திலிருந்து ரசித்து பார்ப்பேன். பிறகு முகேன் என்னிடம் "என்னை மிகவும் புகழ்ந்தால் உனக்கு இப்போது பொறாமையாக இருக்குமே" என கிண்டல் செய்வார். ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் இது அவருக்கும் தெரியும்.
முகேன் உடன் அபிராமி பழகுவது எனக்கு சற்று கஷ்டமாக தான் இருக்கிறது. அதே வேளையில் தனக்காக ஒருவர் வெளியில் காத்திருக்கிறார் என சொல்லி உள்ளார் முகேன். ஆனால் ஏன் அவர் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை... அவர் வெளியே வந்த உடன் அவராக சொன்னால் நான் கேட்டுக் கொள்வேன். இல்லை என்றால் கட்டாயம் நான் அவரிடம் இதை கேட்பேன்.முகேன் குறிப்பிட்ட அந்தப் பெண் நதியா எங்களுக்கும் பழக்கமானவர். எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முகேன் என் தம்பி போன்று என தெரிவித்து இருந்தார். ஆனால் ஏன் இப்படி அந்தப் பெண்ணின் பெயரை குறிப்பிட்டார் என தெரியவில்லை. அவராகவே வெளியே வந்த உடன் எதைப் பற்றி பேசட்டும் என தெரிவித்து உள்ளார் முறைப்பெண்ணான துர்கா.
EXCLUSIVE : "அபிராமியோட பழகுறது கஷ்டமா தான் இருக்கு" - முகெனின் மாமா பொண்ணு! வீடியோ