ஜானு டான்ஸிங்..! இன்னைக்கு பிக் பாஸ் மிஸ் பண்ண மாட்டேன்' - ரியல் ஜானு Insta Story!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 31, 2019 02:43 PM
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் 'போடு ஆட்டம் போடு' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

சேரனுக்கு ரஜினி, கவினுக்கு அஜித், சரவணனுக்கு விஜயகாந்த், சாண்டிக்கு சிம்பு, முகினுக்கு விஜய் என ஒவ்வொருவருக்கும் ஒரு கெட்டப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் லாஸ்லியாவிற்கு 96 ஜானு கெட்டப்பு வழங்கப்பட்டுள்ளது.
திரிஷா நடித்த படங்களில் அண்மையில் படு ஹிட்டடிட்ட படங்களில் 96 படம். கல்லூரி கால காதலை காட்டும் இந்த படத்தில் தமிழ் மக்கள் அப்படியே மூழ்கிவிட்டார்கள் என்றே கூறலாம்.
படம் ஹிட்டை தாண்டி அப்படத்தில் திரிஷா அணிந்த உடை பல கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம்.
96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலை போட்டு ஆட விட்டனர்.
இந்த எபிசோடை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று திரிஷா கமெண்ட் செய்துள்ளார்.