www.garudavega.com

போன வாரமே ரெட் கார்ட் வாங்கியிருக்கனும்..! -சரவணன் எலிமினேஷன் குறித்து பிக் பாஸ் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது எதிர்பாராத டிவிஸ்ட் என முன்னாள் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Kaajal Pasupathi Bigg Boss Saravanan Elimination Hotstar

பெண்களை பேருந்தில் உரசியதாக கூறிய விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்டப் பிறகும் கூட திருப்திபடாத பிக்பாஸ் குழு, அவரை நேற்று அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர். இதனை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கன்ஃபெஷன் ரூமில் இருந்தபடியே வெளியேற்றப்பட்டார் சரவணன். இதனால் ஹவுஸ்மேட்ஸ்களும் அதிர்ச்சியடைந்தனர்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அந்த நிகழ்ச்சிதான் டாப்பில் உள்ளது. அந்த நிகழ்ச்சி குறித்துதான் சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்தும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

சரவணன் வெளியேற்றம் குறித்து  பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆமாம்.. எதிர்பாராத டிவிஸ்ட். கடந்த வாரம் முழுவதும் செலிபிரிட்டிகளும் பொதுமக்களும் இவருக்கு ரெட்கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என கூறியிருந்தனர். அதற்காக கூட இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் காஜல்.