Bigg Boss 3 : பிக்பாஸ் வீட்டில் முடிவுக்கு வந்த முக்கோண காதல் கதை!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 01, 2019 09:32 AM
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி, லாஸ்லியா இடையேயான முக்கோண காதல் கதையில் பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டது.

கடந்த இரண்டு சீசன்களை விட மிகவும் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது பிக் பாஸ் 3 தமிழ். இதற்கு முக்கிய காரணம் கவின், சாக்ஷி, லாஸ்லியா இடையேயான முக்கோண காதல் கதை.
கவின் மீது சாக்ஷிக்கு காதல். ஆனால் கவினுக்கோ லாஸ்லியா மீது க்ரஷ். லாஸ்வியாவுக்கு கவினை ரொம்ப பிடிக்கும். ஆனால் காதல் கீதல் என கதைக்கூடாது என்பது நிபந்தனை. இப்படி போய்க்கொண்டிருந்த காதல் கதையில் கடந்த திங்கள்கிழமை பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டது. வழக்கமான நாமிஷேன் நடைமுறைகள் கன்ஃபஷன் அறையில் தான் நடக்கும். ஆனால் இந்த வாரம் ஓபன் நாமினேஷனை வைத்து அதிர்ச்சிக் கொடுத்தார் பிக் பாஸ். இந்த ஓபன் நாமினேஷனில் கவினை சாக்ஷி நாமினேட் செய்ய, அதற்கு கவின் உட்கார்ந்து உட்கார்ந்து ஃபீல் செய்ய, காதல் உணர்வுகள் உச்சத்தில் ஆடியது. இந்நிலையில் இன்றைய எபிசோடில், ஒவ்வொரு ஹவுஸ்மேட்சும் மற்றவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை ஒரு பேப்பரில் எழுதி போடலாம் என அறிவித்தார் பிக் பாஸ்..
சாக்ஷியுடனான உறவு பற்றிய கேள்விக்கு பதிலளித்த கவின், அவர்களுக்குள் நடந்த அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைத்தார். சாக்ஷியிடம் தான் பலமுறை மன்னிப்பு கேட்டதாகவும், செருப்பை கழட்டிக்கொடுத்து ஆத்திரம் தீர தன்னை அடிக்கப்படி சாக்ஷியிடம் கூறியதாகவும் கவின் தெரிவித்தார். அப்போது மன்னிப்பதாகக் கூறிய சாக்ஷி, அடுத்த நாளே தன்னை நாமினேட் செய்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய சாக்ஷி, கவின் மீதே தவறு இருப்பது போல் மீண்டும் கூறினார். கவின் மீது தனக்கு ஒரு பீலிங் இருக்கும் போது, அவர் வேறுவொருவருடன் கையைப் பிடித்துக்கொண்டு பேசிப் பழகியது தனக்கு பிடிக்கவில்லை என்றும், எனவே தான் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவினை நாமினேட் செய்ததாக தெரிவித்தார்.
அவருடைய பதிலைக் கேட்டு கடுப்பான கவின், 'நீ சொல்வது மட்டும் தான் இங்கு எல்லோருக்கும் கேட்கிறது. என்னுடைய தரப்பை நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை. என்னிடம் கூறிய விஷயங்களை நீ தான் எல்லோரிடமும் ஆள் வைத்து கூறுகிறாய்', என காட்டமாக பேசினார்.
BIGG BOSS 3 : பிக்பாஸ் வீட்டில் முடிவுக்கு வந்த முக்கோண காதல் கதை! வீடியோ