Breaking: காஜலை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் Web Series-ல் இணைந்த ஹீரோயின்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 05, 2019 03:13 PM
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் வெப் சீரிஸில் காஜல் அகர்வாலை தொடர்ந்து பிரபல நடிகை நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்திற்கு முன்பாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
அதன்படி, ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த வெப் சீரிஸில் நமக்கு கிடைத்த தாக்வலின்படி நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து தற்போது கூடுதல் தகவலாக நடிகை கயல் ஆனந்தி இந்த வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
இந்த கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 10 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸாக உருவாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.