Nenjuku Needhi

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’… இதுவரை வெளிவராத BTS pics

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகே நடந்து வருகிறது.

Vijay sethupathi shared BTS pics went viral

Also Read | ஒரே ஃபோட்டோ… ஆல் fans ஹேப்பி!… Behindwoods Gold நிகழ்வில் வைரல் Selfie

விடுதலை…

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ மற்றும் 'பாவக்கதைகள்' (ஒரு இரவு) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து இயக்கும் படமாக “விடுதலை” உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முதலாக இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றுகிறார் வெற்றிமாறன். விடுதலை திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.

வாத்தியார் விஜய் சேதுபதி…

இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற நக்சலைட் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலீசாக நடிக்கிறார். இந்த படத்துக்கு வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

Vijay sethupathi shared BTS pics went viral

விடுதலை ஷூட்டிங்…

முன்னதாக விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் துவங்கியது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வனப்பகுதிகளில் நடந்து வருகிறது.

Vijay sethupathi shared BTS pics went viral

இந்நிலையில் விடுதலைப் படத்தில் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்போது திண்டுக்கல் அருகே சூரி மற்றும் பவானி ஸ்ரீ சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay sethupathi shared BTS pics went viral

லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

இதையடுத்து தற்போது விஜய் சேதுபதி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த இரு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Also Read | HipHop தமிழா நடிப்பில் மரகத நாணயம் இயக்குனர் இயக்கும் புதிய படம்.. மாஸான பெயருடன் வெளியான TITLE LOOK!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi shared BTS pics went viral

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.