Nenjuku Needhi

Behindwoods விருது மேடையில் லோகேஷ் கொடுத்த Thalapathy67 அப்டேட்.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸும் நடந்துச்சு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Lokesh kanagaraj won talent of the decade award in bgm awards 2022

Also Read | சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’… இதுவரை வெளிவராத BTS pics

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது மேடையில் கால் பதித்திருந்தனர். வெற்றிமாறன், செல்வராகவன், விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

Talent of the Decade

மேலும், நிறைய பிரபலங்கள் விருதுகளையும் வாங்கி அசத்தியிருந்தனர். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு, "Talent of the Decade - Tamil" என்னும் விருது, Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில் கிடைத்தது. இயக்குனர் வெங்கட் பிரபு லோகேஷிற்கு விருது வழங்கி கவுரவித்திருந்தார். மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கி, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள 'விக்ரம்' திரைப்படம், ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Lokesh kanagaraj won talent of the decade award in bgm awards 2022

எல்லா சூப்பர்ஸ்டாரையும் டைரக்ட் பண்ணனும்..

தொடர்ந்து, விருது வென்ற பின்னர் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிடம், கமல்ஹாசனை வைத்து இயக்கிய பின்னர் அடுத்து யாரை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், "யாருடன் எல்லாம் நான் பணிபுரியவில்லையோ, அவர்களுடன் எல்லாம் பணிபுரிய வேண்டும். என்னுடைய Filmography-ல் அனைத்து சூப்பர்ஸ்டார் பெயர்களும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. சூப்பர்ஸ்டாருடன் ஒர்க் செய்ய வேண்டும். தல சாருடன் வொர்க் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

Thalapathy67 அப்டேட்

அதே போல, விஜய்யின் அடுத்த படமான Thalapathy67 இயக்குவது பற்றியும், லோகேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இன்னும் கொஞ்ச நாளில் இதுகுறித்த அப்டேட் வந்து விடும். விக்ரம் படம் ரிலீஸ் ஆன அடுத்த சில நாளில் தெரிய வரும். அதே போல, Thalapathy67 மாஸ் மற்றும் கிளாஸ் கலந்த படமாக இருக்கும்" என லோகேஷ் தெரிவித்தார்.

Lokesh kanagaraj won talent of the decade award in bgm awards 2022

கமல்ஹாசனின் தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜிற்கு Behindwoods சார்பில், தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் இருக்கும் இடத்தில், கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இதனைக் கண்டு, முற்றிலுமாக நெகிழ்ந்து போனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Also Read | ஒரே ஃபோட்டோ… ஆல் fans ஹேப்பி!… Behindwoods Gold நிகழ்வில் வைரல் Selfie

BEHINDWOODS விருது மேடையில் லோகேஷ் கொடுத்த THALAPATHY67 அப்டேட்.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸும் நடந்துச்சு.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh kanagaraj won talent of the decade award in bgm awards 2022

People looking for online information on Bgm awards 2022, Lokesh Kanagaraj, Talent of the decade award will find this news story useful.