RRR Others USA
www.garudabazaar.com

கோபியின் ஆட்டத்துக்கு எண்டு கார்டு.. எழிலே கண்ட காட்சி.. இதுக்கு மேல என்ன சாட்சி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களின் பார்வையும் தற்போது 'பாக்கியலட்சுமி' தொடரின் கதாபாத்திரமான கோபி மீது தான் பதிந்து இருக்கிறது.

Baakiyalakshmi ezhil see father gopi with other woman

அப்பாவியாக இருக்கும் தனது மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி, ராதிகாவை திருமணம் செய்ய தயாராகி உள்ளார் கோபி.

இதற்காக வேண்டி, ஒன்றும் அறியாத மனைவியை கோர்ட்டு வரை கோபி அழைத்து சென்றதைக் கண்ட ரசிகர்கள், சீரியல் என்பதையும் தாண்டி, கொதித்து போயினர்.

எழுந்த சந்தேகம்

நெருங்கிய தோழிகளாக இருக்கும் பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோருக்கு கோபி செய்யும் தில்லாலங்கடி வேலைகள் எதுவும் சுத்தமாக தெரியாது. ஆனாலும், சமீபத்திய எபிசோடுகளில், பாக்கியாவுக்கும், பாக்கியா வீட்டில் வேலை செய்யும் செல்விக்கும் கோபியின் செயல்பாடு மீது சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது போல தெரிகிறது.

கச்சிதமா வேலை பார்க்கும் கோபி

இதனிடையே, மகனின் விவாகரத்து முடிவுக்கே பத்ரகாளியாக மாறிய பாக்கியாவின் முகத்தை பார்த்த கோபிக்கு  ஒரு நிமிடம் தலையே சுற்றிப் போனது. ஆனாலும், தொடர்ந்து தன்னுடைய சாமர்த்தியமான நடிப்பால், பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவரையும் ஏமாற்றி, தனது வேலையினை சரியாக முடித்து வருகிறார்.

இதோட கத முடிஞ்சுது?..

இருந்த போதும், அடுத்தடுத்து வெளியாகும் ப்ரோமோக்கள் மற்றும் எபிசோடுகள், கோபி எப்போது மாட்டுவார் என்பதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ, கோபியின் நாடகத்துக்கு எண்டு கார்ட் போட போவது போலவே அமைந்துள்ளது.

தீம் பார்க்கில் பாக்கியா

தீம் பார்க் ஒன்றில், ராதிகா மற்றும் அவருடைய மகளுடன் கோபி வர, இன்னொரு பக்கம், கோபியின் மனைவி பாக்கியா, மகன் எழில் உள்ளிட்ட அனைவரும் வந்துள்ளனர். ஆடல், பாடல் என பாக்கியா உள்ளிட்டோர் ஜாலியாக இருக்கின்றனர். அந்த சமயத்தில், தனது சகோதரனுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை தந்தை கோபிக்கு அனுப்புகிறார் இனியா.

இங்க இருந்து கிளம்பி ஆகணுமே

இதனை பார்த்ததும், தாங்கள் இருக்கும் தீம் பார்க்கில் தான் தனது குடும்பத்தினரும் இருக்கிறார்கள் என்பது கோபிக்கு தெரிய வருகிறது. இதனால் பதறிப் போகும் அவர், ராதிகா மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார். அருகே வேறு ஒரு புதிய தீம் பார்க் இருப்பதாக கூறி, ராதிகாவை சமரசம் செய்து அழைத்துச் செல்கிறார் கோபி.

அதிர்ச்சி அடைந்த எழில்

மூவரும் காரில் ஏறும் நேரம் பார்த்து, எதேச்சையாக அங்கு வரும் ஏழில், வேறு ஏதோ பெண்ணுடன் தந்தை காரில் ஏறிச் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமில்லாமல், வேகமாக சென்ற காரின் பின்னால், "அப்பா, அப்பா" என கத்திக் கொண்டே ஓடவும் செய்கிறார் எழில்.

தொடர்ந்து, சிக்காமல் தப்பித்து வரும் கோபி, இந்த முறை மாட்டிக் கொள்வது போல ப்ரோமோக்கள் இருப்பதால், இத்துடன் கோபியின் வண்டவாளங்கள் அனைவருக்கும் தெரிந்து விடுமா என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

ஆனால், வழக்கம் போல தன்னுடைய நடிப்பால், அனைவரையும் மீண்டும் ஒரு முறை கோபி ஏமாற்றி விடுவார் என்றே பலரும் கருதி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi ezhil see father gopi with other woman

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Ezhil, Gopi, New Promo, Radhika will find this news story useful.