மகளா?.. கோபியா?.. ராதிகா எடுக்கப் போகும் முடிவு என்ன??.. பரபரப்பில் பாக்கியலட்சுமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது மிக மிக பரபரப்பான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது.

baakiyalakshmi radhika mother advice about gopi

பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோர், நெருங்கிய தோழிகளாக இருக்க, பாக்கியாவின் கணவர் கோபி, அவரது மனைவியை ஏமாற்றி விட்டு ராதிகாவை திருமணம் செய்ய திட்டம் போட்டு வந்தார்.

கண்ணீர் விடும் ராதிகா

அப்படி இருக்கையில், கோபியின் தந்தைக்கும், அவரது மகன் எழிலுக்கும் ராதிகா உடனான கோபியின் உறவு குறித்து தெரிய வருகிறது. இதனால், அடுத்தடுத்து மிக மிக பரபரப்பாக பாக்கியலட்சுமி தொடர் நகர, தற்போது ராதிகாவுக்கும் உண்மை தெரிய வந்தது. ஒரு நாள் ராதிகா வீட்டிற்கு குடித்து விட்டுச் செல்லும் கோபி, பாக்கியா தான் தனது மனைவி என்ற உண்மையை புகைப்படத்தைக் காட்டி உளறி விடுகிறார். இதனைக் கேட்டு, நிலைகுலைந்து போன ராதிகா, அங்கேயே கண்ணீர் வடிக்கிறார்.

இதன் பின்னர், மறுநாள் வழக்கம் போல, கோபி வரும் போது, அவரை வெளியேற சொல்லி ராதிகா வெளியேற்ற முயற்சிக்க, மயூரா அருகே செல்லவும் மறுப்பு தெரிவிக்கிறார். இதன் பின்னர், மயூரா மற்றும் ராதிகாவிடம் பேச கோபி அடுத்தடுத்த முயற்சிகள் செய்தும் அது எதுவும் கை கொடுக்கவில்லை.

கோபியை ஒதுக்கும் ராதிகா

தொடர்ந்து ராதிகாவும் பாக்கியாவுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது என்று கோபியிடம் கூற, கோபத்தில் நீயும் மயூராவும் தான் எனது உயிர் என்று கூறி கத்துகிறார் கோபி. அப்போது மயூராவோ, "நீங்களும் எனது அப்பா மாதிரி சண்டை போடுகிறீர்கள். பயமாய் இருக்கிறது" என கோபியை பார்த்து கெஞ்சுகிறார். ஆனால் கோபி தனக்கு வேண்டாம் என்பதில் ராதிகா உறுதியாக இருக்கிறார்.

தாய் சொல்லும் பரபரப்பு காரணம்

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், ராதிகாவின் தாயார் தெரிவித்த விஷயம், சற்று பரபரப்பை உண்ட பண்ணி உள்ளது. "பாக்கியா டீச்சர் தான் கோபியின் மனைவி. அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா. அவர் கணவர் தான் கோபி என்பதை தெரிந்தும் நான் கோபியுடன் வாழ வேண்டுமா?" என தாயிடம் கேள்வி கேட்கிறார் ராதிகா.

இதற்கு ராதிகாவின் தாயார், "அவங்க நல்லவங்களா கெட்டவங்களா என்பது எனக்கு தெரியாது. மயூரா மனதிலும் கோபிதான் தன்னுடைய அப்பா என்ற ஆசையை வளர்த்து விட்டோம். அவர் உன் வாழ்க்கையில் இல்லை என்று கூறி பிஞ்சு மனதை நோகடிக்க பார்க்கிறாயா?. ஒழுங்காக கோபியை திருமணம் செய்யும் வழியை பார்" என கூறுகிறார்.

ராதிகாவும் கோபி வேண்டாம் என இருக்க, அவரின் தாயார் மயூராவை குறிப்பிட்டு பேசி உள்ளதால், ராதிகா மகளுக்காக தனது முடிவை மாற்றி, கோபியை திருமணம் செய்வாரா அல்லது மகளாக இருந்தாலும், கோபி வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi radhika mother advice about gopi

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Gopi, Radhika will find this news story useful.