வேற‌ மாரி செம்ம டான்ஸ் ஆடிய நானி - நஸ்ரியா.. வெளியான புதிய படத்தின் சூப்பர் பாடல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நானி & நடிகை நஸ்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் Promo  பாடல் வெளியாகி உள்ளது.

Nazriya Nani Adade Sundara Promo Song out now

புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரின் தயாரிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்க, நேச்சுரல் ஸ்டார் நானியின் ரோம்-காம் என்டர்டெய்னர் "அண்டே சுந்தரனிகி" திரைப்படம் தெலுங்கில் உருவாகி உள்ளது. விவேக் சாகர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது, அதே நேரத்தில் போஸ்டர்கள் மற்றும் ஹோமம் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது.

Nazriya Nani Adade Sundara Promo Song out now

இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார். லீலா தாம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா நடித்துள்ளார். 

Nazriya Nani Adade Sundara Promo Song out now

ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தின் மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" எனவும்,  தமிழ்ப் பதிப்பிற்கு "அடடே சுந்தரா" எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பட ரிலீசை முன்னிட்டு படத்தில் ந்டித்துள்ள அனைத்து நடிகர்களையும் இனைத்து ப்ரோமோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

Nazriya Nani Adade Sundara Promo Song out now

ஷங்கர் மகாதேவன். யாசின் நிஜார், சுவேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார்.

வேற‌ மாரி செம்ம டான்ஸ் ஆடிய நானி - நஸ்ரியா.. வெளியான புதிய படத்தின் சூப்பர் பாடல் வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Nani Adade Sundara Promo Song out now

People looking for online information on Nani, Nasriya, Nazriya will find this news story useful.