‘கையும் களவுமாக’ சிக்கிய கோபி… பாண்டியன் ஸ்டோர்ஸ்- பாக்கியலட்சுமி சங்கமத்தில் பரபரப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகியவற்றின் சங்கமம் எபிசோட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்….
விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 360 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றான செழியன் கதாபாத்திரத்தில் இதுவரை நடிகர் ஆர்யன் நடித்துவந்தார்.
கோபியின் தில்லுமுல்லுகள்…
இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவையும் கோபி எடுத்தார். பாக்கியலட்சுமியை ஏமாற்றி எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என குறுக்கு வழிகளை மேற்கொண்டார். ஆனால் அவரின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இது சம்மந்தமான நீதிமன்றக் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின.
எப்படியாவது தப்பிக்கும் கோபி…
ஆனால் எந்த நேரமும் கோபி- ராதிகா விவகாரம் அவரது குடும்பத்துக்கு தெரிந்து மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் கோபி எப்படியாவது தப்பித்து சென்று கொண்டிருக்கிறார். இதனால் கோபியின் கதாபாத்திரம் சமூகவலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த கதாபாத்திரத்தை வைத்து மீம்கள் மற்றும் ட்ரோல்கள் வெளியாகி வருகின்றன.
சங்கமத்தில் மாட்டிய கோபி…
இந்நிலையில் இப்போது இந்த சீரியலில் அதிரடி திருப்பமாக கோபி குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலோடு இந்த சீரியலை இணைத்து ‘சங்கமம்’ ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாகிறது. இந்த சங்கமம் எபிசோடில்தான் கோபி- ராதிகா விவகாரம் வெளியாகியுள்ளது.
ராதிகாவை சந்திக்க செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் அவர் கோபியின் புகைப்படத்தைக் காட்டி இவரைதான் திருமணம் செய்யப் போகிறேன் எனக் கூறி விடுகிறார். அதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியாகிறார். பின்னர் கோபியிடம் இதுபற்றி கேட்டு கோபமாக பேச, அவர் கோபமாகி கத்துகிறார். இதில் இருந்து கோபி தப்பிப்பாரா? அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விஷயம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியப் போகிறதா என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
‘கையும் களவுமாக’ சிக்கிய கோபி… பாண்டியன் ஸ்டோர்ஸ்- பாக்கியலட்சுமி சங்கமத்தில் பரபரப்பு! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Gopi Plan To Stop Birthday Plan Moorthi Found Him
- Gopi Plan To Stop Birthday Plan Moorthi Found Him
- Bhakyalakshmi Serial Gopi Is In Problem Viral Episode
- Baakiyalakshmi Gopi Father Get Anger And Starts To Beat Him
- Isha Gopikar And Ram Gopal Varma Webseries Dhaganam
- Gopi Reaction After Radhika Plan To Visit Baakiya Home
- Gopi About Second Marriage To Daughter Iniya - Baakiyalakshmi Serial Latest Promo
- Gopi About Second Marriage To Daughter Iniya
- Gopi Father Decision After Son Cheating In Baakiyalakshmi Serial
- Baakiyalakshmi Ezhil See Father Gopi With Other Woman
- Baakiyalakshmi Gopi Reaction After Baakiya Beats Her Son
- Baakiyalakshmi Gopi Reaction After Baakiya Beats Her Son
தொடர்புடைய இணைப்புகள்
- நான் நினைச்ச மாதிரியே எனக்கு Wife அமைஞ்சுருக்காங்க😍Parithabangal Sudhakar Love Story💖 #MMK #Shorts
- Sudhakar ஓட Romantic Side எனக்கு மட்டும் தான் தெரியும்😍Parithabangal Sudhakar Wife Opens Up💖 #MMK
- என்ன Sudhakar இதெல்லாம்🤣Gap-ல இந்த வேல-லாம் வேற பாக்குறீங்களா🙄 #MMK #Behindwoods #Shorts
- Lakshmi-க்கு முன்னாடி எனக்கு ஒரு Love இருந்துச்சு😳Parithabangal Sudhakar Love Story💖 #MMK #Shorts
- என் மாமனார் கிட்ட தயங்கி தயங்கி தான் பேசுவேன்🙄 Parithabangal Sudhakar Opens Up😯 #MMK #Shorts
- Unconditional-ஆ இருக்கதுக்கு பேர் தான் Love💖 Parithabangal Sudhakar Talks About Love💕 #MMK #Shorts
- ஒரு வேல Media பக்கம் வரலன்னா இப்படி ஆகிருப்பேன்😮Parithabangal Sudhakar Talks About His Life😃 #MMK
- Gopi Marriage-அ விட Wife Birthday-வா முக்கியம்😳Parithabangal Sudhakar Friendship Goals😍 #MMK #Shorts
- Sudhakar I Love You-லாம் சொல்லவே இல்ல🙄Straight Out-ஆ Marriage பண்ணலாம்னு.🤩 #MMK #Behindwoods #Shorts
- வீட்ல Parents-அ கஷ்டப்படுத்த கூடாதுன்னு முடிவு எடுத்தோம்😮Parithabangal Sudhakar Love Story💖 #MMK
- ஏன் Sir நம்ம வாழ்க்கைல மட்டும் இப்படி நடக்குது🙄 Parithabangal Sudhakar Love Story💖 #MMK #Shorts
- Sudhakar Profession பத்தி சுத்தமா தெரியாது😳 Parithabangal Sudhakar Wife Opens Up😮 #MMK #Shorts