'விக்ரம்' பார்த்துட்டு, 'டில்லி' கார்த்தி ட்வீட்.. சூர்யா குறித்தும் சொன்னது என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தை பார்த்த பின் நடிகர் கார்த்தி டிவிட்டரில் & முகநூலில் படம் குறித்து பதிவு செய்துள்ளார்.

Kaithi Dilli Karthi Review about Kamal Haasan Vikram Movie

Also Read | சுந்தர் சி இயக்கத்தில் 'உள்ளத்தை அள்ளித்தா' படம் போல கலகலப்பான காமெடி படம்.. ரிலீஸ் எப்போ?

‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Kaithi Dilli Karthi Review about Kamal Haasan Vikram Movie

விக்ரம் படத்தில் சில காட்சிகளில், லோகேஷ் கனகராஜ் முன் இயக்கிய கைதி படத்தின் ரெபரன்ஸ் இடம் பெற்றுள்ளது. கைதி படத்தில் பிஜோய் கதாபாத்திரம் (நரேன்) , அடைக்கலம் கதாபாத்திரம் (ஹரிஷ் உத்தமன்) , அன்பு கதாபாத்திரம் (அர்ஜூன் தாஸ்) ஆகிய கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் இடம் பெற்றுள்ளன. லாரி உரிமையாளர் தீனாவும், கைதி படத்தில் கார்த்தியின் குழந்தையாக வரும் பெண் குழந்தையும் விக்ரம் படத்தில் நடித்துள்ளனர்.

Kaithi Dilli Karthi Review about Kamal Haasan Vikram Movie

கைதி படத்தின் அடுத்தக்கட்டமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. மேலும் விக்ரம் படம், கைதி-2 & விக்ரம் -3 படங்களுக்கும் லீட் உடன் நிறைவடைகிறது. சூர்யாவின் சிறப்பு தோற்றம் இதற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ளது.

Kaithi Dilli Karthi Review about Kamal Haasan Vikram Movie

இந்நிலையில் கைதி படத்தின் ஹீரோ கார்த்தி, 'விக்ரம்' படம் பற்றி முகநூல் & டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், விக்ரம் - அனைவரும் குறிப்பிட்டது போல், எங்களுக்கு உண்மையான கொண்டாட்டம் கமல் சார்! ஆக்‌ஷனும் காட்சியமைப்பும் சுவாரசியமாக ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருந்தது.

Kaithi Dilli Karthi Review about Kamal Haasan Vikram Movie

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் தனது தீவிரத்தை ஒருபோதும் கைவிட மாட்டார். விஜய்சேதுபதி வில்லனிசத்தின் புதிய சாயலை வெளிப்படுத்துகிறார். அனிருத்…என்ன ஒரு பின்னணி இசை...அவர் வில்லன்களை பெரிதாகவும், ஹீரோக்களை மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் காட்டுகிறார். இறுதியாக... மனுசன் ரோலக்ஸ் சார் பார்ப்பதற்கு பயமாக இருந்தார். லோகேஷ் உங்களுக்குள் இருக்கும் கமல் ரசிகனின் உற்சாகத்தை முழுவதுமாக படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மாற்றிவிட்டீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

Also Read | "எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துனா.. ".. நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் மிரட்டும் TRAILER!

தொடர்புடைய இணைப்புகள்

Kaithi Dilli Karthi Review about Kamal Haasan Vikram Movie

People looking for online information on Kaithi movie, Kamal Haasan, Karthi, Karthi Review about vikram Movie, Vikram Movie will find this news story useful.